அமைச்சர் ஜெயகுமாரை போட்டு தாக்கும் கமலஹாசனின் ரசிகர்கள்…!
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் அனைத்து அமைச்சர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், கமல் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவர் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் போல் மாறிவிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்
அதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள கமல் ரசிகர்கள், ‘மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சி நடிப்புதான் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது, அதை போல அவருக்கு முதல்வர் நாற்காலியையும் பெற்று தரும் என்று கூறினர். அதுமட்டுமின்றி அமைச்சர்ஜெயக்குமாருக்கு ‘தேவர் மகன்’ கிளைமாக்ஸையும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்’ என்று பதிவு செய்துள்ளனர்.