சசிகலாவை சந்திக்க நாளை பெங்களூரு செல்கிறார் தினகரன்!!
அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கூவத்தூர் பாணியில் எம்.எல்.ஏ-க்களை தக்கவைக்க திட்டமிட்டது. புதுச்சேரி-கடற்கரை சாலையில் அரியாங்குப்பத்தையடுத்து, கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘விண்ட் ஃப்ளவர்’ என்ற தனியார் ரிசார்ட்ஸில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது