ஜெ.சமாதியில் மாணவர்கள் திடீர் போராட்டம்: குண்டுகட்டாக வீசி ஏறிந்த போலீஸ்..!
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு மாணவர்கள் நுழைந்தனர். அங்கு தடுப்புகளை தாண்டி ஜெ. சமாதியிலேயே அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை சிறிதும் எதிர்பார்க்காத போலீஸ், மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்பொழுது, ஓபிஎஸ்க்கு தியானம் செய்ய அனுமதி அளித்த காவல் துறையினர் தங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.