நோபல் பரிசு பெற்ற ஜியாபோ மரணம்.., உலக நாடுகள் இரங்கல்
சீனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லி ஜியாபோ(61), கம்யூனிச பாதையில் இருந்து ஜனநாயக பாதைக்கு சீனா மாற வேண்டும், ஒரு கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். மனித உரிமையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு புத்தகங்கள் எழுதினார்.
சீன அரசியல் சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி 2008ல் இவர் எழுதிய புத்தகத்துக்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, 2010 ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு ஜியாபோவுக்கு வழங்கப்பட்டது.சமீபத்தில் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். ஜியாபோவின் மறைவுக்கு உலக நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.