இந்திய மாணவருக்கு நாங்கள் வேலையே வழங்கவில்லை என மறுக்கும் கூகிள் நிறுவனம்

Default Image
புதுடெல்லி : அரியானா மாநிலம், குருஷேத்ராவில் உள்ள மதானா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா(16). சண்டிகரில் உள்ள அரசு மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 11ம் வகுப்பு தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் ஹர்ஷித்துக்கு கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.44 ஊதியத்தில் பணி வழங்கியுள்ளதாகவும் அவர் விரைவில் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஹர்ஷித் கிராபிக் டிசைனராக பணியில் சேர உள்ளார் எனவும் தகவல் வெளியாகியது.
மாணவன் ஹர்ஷித் கூகுள் நிறுவனத்தில் முதலில் பயிற்சிக்கு செல்கிறார். ஒரு ஆண்டு பயிற்சியின்போது மாதந்தோறும் அவருக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். அவரது பயிற்சி நிறைவடைந்தவுடன் மாதச் சம்பளமாக ரூ.12 லட்சம் வழங்கப்படும் போன்ற தகவல்கள் வைரலாகியது.
ஆனால் கூகுள், இதை மறுத்துள்ளது. நாங்கள் இதுவரையில் அப்படி ஒரு மாணவனை தேர்வு செயவில்லை எனவும் அப்படிப்பட்ட தகவல்கள் எதுவும் எங்கள் கோப்புகளில் குறிப்பிடபடவில்லை எனவும் கூகிள் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்