இந்திய அணி தனது வெற்றியை நியூசீலாந்துக்கு எதிரான ஒரு நாள்போட்டியில் பதிவு செய்யுமா !
கிரிக்கெட்டில் இன்று இந்திய அணி நியூசீலாந்து அணியுடன் தனது முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது .நியூசீலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது-இருபது போட்டியிலும் பங்கேற்கிறது .இதற்காக அந்த அணியின் வீரர்கள் அனைவரும் இந்திய வந்து பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றனர் .
பின்னர் இன்று துவங்கும் போட்டியில் இருஅணிகளும் விளையாட உள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா நல்ல பார்மில் உள்ளார்.ரஹானே நல்ல பார்மில் இருந்தாலும் தவான் வந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.ரஹேனே வாய்ப்பு கேள்விக்குரியாக உள்ளது.விராத் கடந்த தொடரில் திடீர் திடீர் என்று தான் அடிக்கிறாரோ தவிர மற்ற நேரங்களில் இல்லை .பாண்டியா நன்றாக விளையாடுகிறார் .டோனி கடந்த தொடரில் சிறிது சறுக்கினார் அதிலிருந்து மீண்டும் அவர் வந்தால் நல்ல வெற்றி வாய்ப்புதான்.மனிஷ்,கேதார் ஆகியோரும் ஜொலிக்க வேண்டும் .பந்துவிச்சில் புவனேஸ்வர் ,பும்ராஹ் நல்ல போர்மில் உள்ளனர்.குல்டீத், அக்சர்.சாகல் ஆகியோர் ஜொலிக்க அவ்வப்போது தவறுகின்றனர் .பீல்டிங் நன்றாகத்தான் உள்ளது.நியூசீலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கேயின் வில்லியம்சன்,ரோஸ் டேய்லர்,காலின் மூன்றோ, அன்டேர்சன் ,சௌதி ,பெல்ட் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது .இந்த அணியும் பீல்டிங் ,பேட்டிங்,பௌலிங் அனைத்திலும் சிறந்தது .ஆனால் மினி உலக கோப்பைக்கு பிறகு ஒரு ஒருநாள் தொடரில் கூட பங்கேற்றது இல்லை அதன் சற்று பின்னடைவு .இருந்தாலும் போட்டியில் விறுவிருபுக்கு பஞ்சம் இல்லை.