ஐகோர்ட் தடையை மீறி போராட்டம்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு!!!
ஐகோர்ட் தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்றும் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை ரயில் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை, நெல்லை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. மறுப்பு: இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி அளித்த பேட்டியில், கோரிக்கைகளை நிறைவேற்றம் வரை வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கும் என அறிவித்தோம்.