நிலக்கடலை சாப்பிட்டால் மாரடைப்பு வருமாம்? ஓர் அதிர்ச்சி தகவல்!

Default Image
நமக்கு எளிதாக கிடைத்திடும் உணவுப்பொருள் நிலக்கடலை. இதில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன என்பதால் கர்பிணிகள் சாப்பிடலாம்,சர்க்கரை நோயைத் தடுக்க்கும், கொழுப்பைக் கரைக்கும்,மாரடைப்பு வராமல் தடுத்திடும் என்று ஏகப்பட்ட நன்மைகளை பட்டியலிடுவார்கள்.ஆனால் இதற்காக, தொடர்ந்து நிலக்கடலையை எடுப்பதும் ஆபத்தானது.
அளவில்லாமல் நிறைய நிலக்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரி இருக்கும் இதே எண்ணெயில் வறுத்தால் 170 கலோரிகள் அதிகரித்திருக்கும்.
இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நிறைய கடலையை சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக்கொண்டால் சத்துக்குறைபாடு ஏற்படும். நிலக்கடலையில் அதிகளவு ப்ரோட்டின் இருக்கிறது என தொடர்ந்து எடுப்பவர்கள் நிலக்கடையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சத்தான டயட் என்பது எல்லாச் சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம்.உடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.
நிலக்கடலையில் அதிகப்படியான போஸ்போரஸ், ஃபைட்டிக் ஆசிட் இருக்கிறது. ந்த பைட்டிக் ஆசிட் நம் உடலுக்கு தேவையான மற்ற மினரல்ஸ்களை உறிஞ்சிவிடும். உடலியல் இயக்கங்களுக்கு எல்லாவிதமான சத்துக்களும் அவசியம். ஏற்கனவே குறைவான சத்துக்கள் தான் நம் உடலில் இருக்கும் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் நிலக்கடலையால் பாதிப்புகள் உண்டாகும்.
நிலக்கடலையில் அதிகப்படியான லெக்டீன் இருக்கிறது. இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது. மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரியாமல் அடைத்துக் கொண்டு விடும் இதனால் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.
நிலக்கடலையில் ஒமேகா 6 இருக்கிறது. இதனைச் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் நம் உடலுக்கு ஒமேகா 3 மற்றும் 6 இரண்டுமே தேவை. ஒமேகா 3 குறைவாக இருக்கும் நிலக்கடலையை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடலில் ஒமேகா 3 சத்து குறைந்திடும். இதனால் உடல்நலக்குறைவு ஏற்படும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்