காத்தரிடமிறுந்து உறவுகளை முறித்துகொண்ட நாடுகள்…!
கத்தாருடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளில் 6 நாடுகள், 2022ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள கால்பந்தாட்ட உலகக் கோப்பையை, அந்நாட்டிலிருந்து பறிக்க வேண்டுமெனவும், இல்லாதுவிடின் அந்த உலகக் கோப்பையை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளன. சவூதி அரேபியா, யேமன், மௌரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகியன, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு (ஃபீபா), இது குறித்து எழுதியுள்ளன. இந்தத் தகவலை, ஃபீபாவின் தலைவர் ஜியானி இன்பான்டினோ உறுதிப்படுத்தினார்.உலக கால்பந்தாட்டத்தில் இது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…