செயலாளரின் சிறை விவகாரம் தொடர்பாக கர்நாடக சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் தம்பிதுரை…….
கோவை: சசிகலாவுக்கு வசதி அளிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக சிறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் எனக் கூறினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட கோவை வந்த தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.