நடிகர் சத்யராஜ் மகளுக்கு மிரட்டல்…..!
திரைக்கலைஞர் சத்யராஜ் அவர்களின்
மகள் திருமிகு திவ்யா அவர்கள்
ஊட்டச் சத்து நிபுணராக இருந்து
செயல்பட்டு வருகிறார்.
அவரை அமெரிக்க நிறுவனம் ஒன்றின்
பிரதிநிதிகள் இருவர் அணுகி
அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அளித்து பொது மக்களுக்கும்.. நோயாளிகளுக்கும்
சிபாரிசு செய்திட வேண்டியுள்ளனர்.
அதை சோதனை செய்து பார்த்த திவ்யா, அந்த நிறுவனத்தின் தயாரிப்பில்
ஊக்க மருந்துகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலவைகளும்
கலந்திருப்பதாகவும்..
அது பொது மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல..
அதை உட்கொள்பவர்களுக்கு
கண்பார்வை கோளாறு தொடங்கி ஈரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்பு
ஏற்படும் என்றும்..
அதை பொது மக்களுக்கு
சிபாரிசு செய்ய முடியாது என்று
கூறி உள்ளார்..
சந்திக்க வந்த பிரதிநிதிகள் இருவரும்
தங்கள் நிறுவனம் அரசியல் செல்வாக்கு மிக்க மனிதர்களின் துணையோடுதான் வெளிவருகிறது என்றும்
அவரை சிபாரிசு செய்யும்படி
பகிரங்க மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து
இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு
கடிதம் எழுதி உள்ளார் திவ்யா அவர்கள்.
அந்த நிறுவனத்தின் தயாரிப்பை தடை செய்யக் கோரியும்..
பொது மக்கள் உயிருக்கு
பாதகம் விளைவிக்கும் மேற்படி நபர்கள் மீது
நடவடிகை எடுக்கக் கோரியும்.
திவ்யாவைப் போன்ற நேர்மை மிகுந்த
டாக்டர்கள் நம் தேசத்து மக்கள்
உயிர் காக்கத் தேவைப்படுகிறார்கள்.
வாழ்த்துக்கள் திவ்யா..
உங்களோடு நாங்களும்..
மிரட்டலை சந்திப்போம்.