அதிரடி சதம் அடித்த வீரர் !உலக சாதனை படைத்த மில்லர்..
வங்கதேச அணி தென் ஆப்ரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இந்நிலையில் போட்செப்ஸ்ட்ரூமில் வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த 2வது டி20 போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். அவர் 101 ரன்னுடன் (36 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக, சக தென் ஆப்ரிக்க வீரர் ரிச்சர்ட் லெவி 45 பந்தில் சதம் விளாசி படைத்த சாதனையை அவர் நேற்று முறியடித்தார். முகமது ஷபியுதின் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் மற்றும் கடைசி பந்தில் 1 ரன் உட்பட 31 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன் மூலம் தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி .பெற்றது