நம் உடலில் உள்ள ரத்தத்தை உற்பத்தியாக்கும் உணவுகள் பொருள்கள் ..
உடலின் அடிப்படை சக்தியான ரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
அந்த வகையில் நம் உடலில் புதிய ரத்தத்தை அதிகரிக்கச் செய்து அதை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கை உணவுகள்.
ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்:
பீட்ரூட் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்திப் பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து, சுற்றி இருக்கும் இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதில் முட்டையை உடைத்து விட்டு நெய் சேர்த்து கலந்து அதை 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டால் ரத்தம் விருத்தியாகும். மேலும் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்து, உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
தினமும் விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தமாக்கும்.