‘தலைவன் இருக்கிறான்’ இனி கவலைவேண்டாம்:கமலஹாசன்
கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் ‘தலைவன் இருக்கிறான்’.
இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு 2010ம் ஆண்டே வெளிவந்துள்ளது. அப்போது இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போது அறிவிப்புடன் அந்தப் படம் நின்று போனது. மீண்டும் 2015ம் ஆண்டு கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வந்தன.
அந்த சமயத்தில் ஹிந்தியில் ‘அமர் ஹைன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்தியில் சைப் அலிகான் நடிப்பார் என்றும் சொன்னார்கள். அப்போதும் அந்தப் படம் கைவிடப்பட்டது.
இப்போது மீண்டும் ‘தலைவன் இருக்கிறான்’ படம் ஆரம்பமாக உள்ளதாக கமல்ஹாசன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக கமல்ஹாசன் சமீப காலமாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் ‘தலைவன் இருக்கிறான்’ படம் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பமாக உள்ளதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.