ஹெச்.ராஜாவுக்கு திருநெல்வேலி அல்வா
தமிழக சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது இதில் ஹெச்.ராஜா படுதோல்வி அடைந்தார் மொத்தம் உள்ள 286 வாக்குகளில் மணி அவர்கள் 232 வாக்குகளும் ஹெச்.ராஜா 52 வாக்குகளும் 2 வாக்கு செல்லாத ஓட்டகவும் பதிவானது .
இதனால் சமூக வலைத்தளங்களில் மீம் மற்றும் போஸ்ட் போட்டு அவரை கிண்டல் செய்து வருகின்றனர் ,இதனிடையில் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.MS.முத்து தனது முகநூல் பக்கத்தில் தமிழக சாரணர் மற்றும் சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தலில் படுதோல்வி அடைந்த பிஜேபி கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் திருநெல்வேலி அல்வா அனுப்பி வைக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த தோல்வியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.