கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரை கொலை செய்தது எப்படி கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்…!

Default Image

கோவை :  கோவை துடியலூர் சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். துப்பு துலங்கவில்லை. இதையடுத்து, இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இக்கொலையில் கோவை சாயிபாபாகாலனி கே.கே.புதூரை சேர்ந்த முபாரக் மற்றும் சதாம் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாயினர். இவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கடந்த 4 மாதத்திற்கு முன்பு அறிவித்தனர். 

சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி தலைமையில், போலீசார் நேற்று மாலை கோவை கருமத்தம்பட்டி பகுதியில் முகாமிட்டு, விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த சதாம் என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவரிடமிருந்து செல்போன் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நேற்றிரவு அவரை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இன்று காலை போலீசார் அவரை முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சதாம் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். 22.9.16 அன்று இரவு 11 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சசிக்குமாரை 2 பைக்குகளில் 4 பேர் பின் தொடர்ந்து சென்று கொலை செய்தோம். பின்னர் நான் ஐதராபாத்துக்கு சென்று விட்டேன். தலைமறைவாக இருந்த நான் அங்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன். பெற்றோரை பார்க்கும் ஆசையில் கோவைக்கு வந்த போது, என்னை போலீசார் கைது செய்து விட்டனர். நான் 10ம் வகுப்பு படித்துள்ளேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்