பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றார் அமெரிக்க பேராசிரியர்….!
2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன் இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்ததார். அதன்படி 2017-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஹெச்.தாலர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வின் முன்னோடியாக திகழ்ந்தவர் ரிச்சர் ஹெச்.தாலர். பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார்.
இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பரிந்துரையில்,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக பணியாறிய ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், நாடே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு அப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.