கீழடியில் அகழாய்வு இடத்தை மூடக்கூடாது; ஐகோர்ட் கிளை உத்தரவு!!!
கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தில் பணிகள் தொடரவும்,அருங்காட்சியகம் அமைக்கவும் கனிமொழிமதி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், கீழடியில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தை மூடக்கூடாது. தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வு நடந்த இடம் மூடாமல் தான் உள்ளன. அகழாய்வு நடந்த தனியாருக்கு சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு வழங்கி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.