இன்று உலகப் போலியோ தினம்….!
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களின் நினைவாக உலகப் போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் போலியோ தடுப்பு மருந்தினால் 99% கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஏற்படும் 200 போலியோ தொற்றில் ஒன்று குணப்படுத்த முடியாத வாதத்திற்குக் கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேருக்கு மூச்சு தசைகள் இயக்கம் இழப்பதால் மரணம் அடைகின்றனர். 1988-ல் 350000 நோயாளிகள் என்ற கணக்கில் இருந்து 2015 –ல் 74 என்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது. இது 99% குறைவாகும். இந்தக் குறைவுக்குக் காரணம் இதை ஒழிக்க உலக அளவில் எடுக்கப்பட்ட முயற்சியே ஆகும்.