தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா…!
தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்தக் காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ல் நியமிக்கப்பட்ட ராஜரத்தினம், அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் வாதாடியவர். ஓராண்டுக்குப் பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியமும் கூடுதல் வழக்கறிஞர்கள் ஒரு சிலரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி உடல்நிலையைக் காரணம் காட்டி, அந்தப் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். அவருக்குப் பதிலாக, அரசின் தலைமை வழக்கறிஞராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கறிஞர்களின் ராஜினாமா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கர்நாடக நீதிமன்றம்களின் பொறுப்பு நீதிபதி ஜெயந்த் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தான் இஷ்ரத் ஜஹான் எனும் 19-வயது இளம் முஸ்லிம் பெண்ணையும் அவரது நண்பரையும் காவல்துறை அதிகாரிகளே “சாதாரண ஆட்கள்”வேடமிட்டு கொலை செய்தனர்.அதற்கு துணை நின்ற அமித்ஷா மற்றும் மோடியை நீதிமன்ற படிகட்டுகளில் ஏற வைத்தவர் என்பது குறுப்பிடத்தக்கது