கடலில் கொட்டிகிடக்கும் ஹைட்ரோ கார்பன்கள்!!!
இந்தியாவை சுற்றி உள்ள கடல் பகுதியில், நீருக்கு அடியில் விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள் மில்லியன் டன் கணக்கில் கொட்டிக் கிடப்பதாக இந்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இத்தகைய விலை மதிப்பற்ற, அரியவகை உலோகங்களும், தாதுக்களும் மங்களூரு, சென்னை, மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்ச தீவு பகுதிகளில் ஏராளமான இருப்பதாக 2014 ம் ஆண்டு முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுண்ணாம்ப கல், சக்திவாய்ந்த பாஸ்பேட், கிருமி நாசினிகள், ஹைட்ரோ கார்பன்கள், உலோக படிவங்கள் உள்ளிட்டவைகள் அதிகம் நிறைந்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் 181,025 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டது. இதில் 10,000 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உலோகங்கள், தாதுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவை ஒட்டிய மன்னார் வளைகுடா, லட்சதீவு, அந்தமான் கடல் பகுதிகளிலேயே இந்த பொக்கிஷங்கள் அதிக நிறைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.