அசல் ஓட்டுநர் உரிமம்:இன்று முதல் கட்டாயம்…!!
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்ககளை எடுத்து வருகின்றனர்.அதில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் உத்திரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் நகல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.ஆவணங்கள் தொலைத்தவர்கள் காவல்துறை அறிவித்துள்ள www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.