ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டி:இந்தியா ஹாட்ரிக் வெற்றி!!!
2019 ல் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் மக்காவ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தி அமர்க்களப்படுத்தினர் சுனில் செத்ரி தலைமையிலான இந்தியப் புலிகள். இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களம் கண்ட பல்வந்த் சிங் இரண்டு கோல்கள் அடித்து மிரட்ட, கொஞ்சம் பலவீனமான எதிரணியான மக்காவை துவம்சம் செய்தது இந்திய அணி. மேலும், இது ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.