“யாரும் என்கிட்ட வைச்சிகாதிங்க” என்று மிரட்டிய ஜெய் ஜோடி…..!
‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த சனா அல்தாப், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
மலையாளத்தைச் சேர்ந்த சனா அல்தாப், துணை நடிகையாக ஒரு படத்தில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் ஆனார். சில மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். வெங்கட் பிரபு & டீமுக்கு இவரைப் பிடித்துவிட்டதோ, என்னவோ. வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கும் ‘ஆர்.கே. நகர்’ படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.
மலையாள நடிகை கடத்தல் சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்நேரத்தில், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சனா அல்தாப். ‘என்கிட்ட யாரும் வச்சிக்காதீங்க.’ என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.