அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஒட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்கும் அசல் சான்றிதழ்கள் தொலைந்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று செவ்வாயன்று (ஆக. 29) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் டிராபிக்ராமசாமி முறையிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கமான பட்டியலில் வரும்போது விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும் அசல் ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததில் எந்தவித தவறும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.