ஒரே நடிகரை வைத்து இரு படங்களை தயாரிக்கும் தனுஷ்…!
ஒரே ஹீரோவை வைத்து இரண்டு மலையாளப் படங்களைத் தயாரித்து வருகிறார் தனுஷ்.
தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, மலையாளப் படங்கள் தயாரிப்பதிலும் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ். ‘தரங்கம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மலையாளத்தில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் தனுஷ். மினி ஸ்டுடியோ என்ற கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம், தனுஷுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், இளம் நடிகரான உன்னி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டோமினிக் அருண் இயக்க, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
இந்தப் படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில், அடுத்த படத்தையும் தயாரிக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளார் தனுஷ். கால்பந்து வீரரான ‘மரடோனா’வின் பெயர்தான் படத்தின் தலைப்பு. விஷ்ணு நாராயணன் இந்தப் படத்தை இயக்க, டொவினோ தாமஸ் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷர்மிளா நாயர் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் டோவினோ தாமஸ் இடதுசாரி மாணவர் சங்கமான இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) தலைவராக நடித்த ‘ oru meican apratha’ மலையாள படம் கேரளாவில் மிகபெரிய வெற்றியை பெற்றது குருப்பிடதக்கது.