கமல் டெங்குக்கு ஆதரவாளர், டெங்குக் கொசுவிற்கு ஆதரவாளர் இல்லை எனவும் சொல்ல முடியாது:இல.கணேசன்
சரியான மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகள் வரும் வரை நிலவேம்புக் கசாயத்தை யாருக்கும் விநியோகிக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அரசியல் தலைவர்களும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “அதிகமான அளவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை தர வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், பாஜகவும் பல இடங்களிலும் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் போது நடிகர் கமல் வித்தியாசமாக ஏன் இவ்வாறு குரல் கொடுக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. இதனால் கமல் டெங்குக்கு ஆதரவாளர், டெங்குக் கொசுவிற்கு ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியாது. இருப்பினும் கமல் கூறியது சரியான கருத்தல்ல. எல்லா விஷயத்திலும் வித்தியாசமாக பேசினால் புகழ் கிடைக்கும் என்று பேசுபவர்கள் போல கமல்ஹாசன் நடந்துகொள்வார் என நான் நினைக்கவில்லை. ஏன் இப்படி பேசினார் என அவரை தான் கேட்க வேண்டும்.” என்று கூறினார்.