ஸ்மார்ட் போன் உபயோகிப்பதினால் உடலில் உண்டாகும் விளைவுகள்..!!

Default Image
ஸ்மார்ட் போன் என்பது நமது கையின் ஆறாம் விரல் ஆகிவிட்டது. ஒரு நாள் தவறுதலாக போனை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் அன்றைய நாள் முழுவதும் நாம் எதோ ஒன்றை இழந்தது போல் இருக்கிறோம். முன்பெல்லாம் எவ்வளவோ தொலைபேசி எண்களை தனது ஞாபகத்தில் வைத்திருந்தவர்கள் கூட இன்று தன் வீட்டில் இருப்பவரின் எண்ணை கூட போனில் இருந்து தான் பார்த்து கூறுகிறார்கள்.
ஸ்மார்ட் போனின் வரவிற்குப் பிறகு மனிதனின் வாழ்வியலில் ஒரு பெரிய மாற்றம் வந்தது உண்மை . ஒரு பொருள் பல வேளை என்பதுபோல் ஒரு போன் அலாரமாக,ரேடியோவாக,டீவியாக,கணினியாக,விளை யாட்டு களமாக,இப்படி அதன் பயன்களை அடுக்கி கொன்டே போகலாம்.
மல்டி டாஸ்கிங் என்று சொல்லக்கூடிய ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் கொண்டது .இந்த ஸ்மார்ட் போன் மோகம் காலப்போக்கில் ஸ்மார்ட் போனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையில் தான் இருக்கிறது.
நோமோபோபியா என்பது மொபைல்போன் தன் கையில் இல்லாத போது ஏற்படுகின்ற ஒரு அச்சம் தழுவிய நிலை. இந்த மன நோய் சமீபத்தில் பரவலாக பலரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வருவதற்கான மறுவாழ்வு மையங்களும் தொடங்கப் படுகின்றன.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு பிறகு முதுகு வலி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் சிரோபிராக்டிக் அசோசியேஷன் குறிப்பிடுகின்றது.
ஸ்மார்ட்போனை தொடர்ந்து உபயோகிப்பதால், குறுகிய கால பாதிப்புகளை தாண்டி நீணட காலபாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Occipital neuralgia என்ற நரம்பியல் நிலை உருவாகிறது. இந்நிலையில் உச்சந்தலையில் இருந்து முதுகெலும்புக்கு செல்லும் நரம்புகள் சுருக்க படுகின்றன அல்லது வீக்கமடைகின்றன. இதனால் தீராத தலைவலி உண்டாகிறது.இதனை குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது. 
நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் திரையினை பார்த்து கொண்டே இருப்பது ஒரு வித பதற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது. போனில் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தொடர்ந்து அவர்களின் பதில்களுக்காக காத்துகொன்டே இருப்பதால் இந்த சூழல் உருவாகிறது. எதிர்பார்த்தபடி பதில் வராத போது ஒரு அழுத்தம் உண்டாகிறது.
அவரக்ளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை பரிசோதித்தனர். 14 மணி நேரம் தொடர்ந்து தொலைபேசியில் நேரத்தை செலவழித்தவர்களின் உடல் நிலை குறைந்த பட்சம் 1.5 மணி நேரம் செலவழிபவர்களின் உடல் நலத்தை விட பின் தங்கி இருந்தது.
ஸ்மார்ட் போன்கள் நம்மை இந்த சமூகத்துடன் இணைப்பதை காட்டிலும் அதிகமாக தனிமை படுத்துகிறது.இதன் பயன்பாடு நம்மை ஒரு சுயநலவாதியாக மாற்றுகிறது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்