நீங்கள் வெறும் வயிற்றில் மாத்திரைகள் போடுபவரா..?
உடல் பாதிப்புக்கு மருத்துவர் மாத்திரை எழுதிக் கொடுப்பின், சிலர் அதனை காலையில் எழுந்து டி, காபி அல்லது பால் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொள்கின்றனர்.
இதனால் உடலில் உள்ள நோய் தீர்வதற்கு பதிலாக, மற்றும் பல நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சாப்பாட்டிற்குப் பிறகு போடப்படும் மாத்திரைகளை, வெறும் டி, காபி குடித்து விட்டுப் போடுவதால், மாத்திரையின் திறனை உடல் சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப் படி உணவை சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடுவது நல்லது.
நல்ல ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு நோய் வருவதேக் குறைவுதான். வந்தாலும் எளிதில் குணமாகிவிடும்.