இறுதிகட்ட படபிடிப்பில் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துவரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படம், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ எனத் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மம்மூட்டி கேரக்டரில் அரவிந்த் சாமியும், நயன்தாரா கேரக்டரில் அமலா பாலும் நடித்து வருகின்றனர். ‘தெறி’யில் நடித்த மீனா மகள் நைனிகா, அரவிந்த் சாமி – அமலா பாலுக்கு மகளாக நடிக்கிறார். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடிக்கின்றனர்.
சென்னை, கொல்கத்தா, கொச்சி ஆகிய இடங்களில் நடந்துவரும் இதன் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ரமேஷ் கண்ணா தமிழ் வசனங்களை எழுத, மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘பிரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ படங்களை இயக்கியவர்.