கோவில்பட்டியில் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

Default Image

தூத்துக்குடி, கோவில்பட்டியில் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்போராட்டத்தை துவக்கியுள்ளனர்.திருநெல்வேலி, சீவலப்பேரி, தாமிரபரணி ஆற்றில் இருந்து கோவில்பட்டிக்கு கடந்த 35 ஆண்டுகளுக்குமுன்பு அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது தண்ணீர் செல்கிறது.

 ஆனால்தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் 2012ல் இரண்டாவது பைப் லைன் திட்டத்தை 88 கோடியில் ஜெயலலிதா துவக்கிவைத்தார். ஒன்றரை ஆண்டுகளில் பணி நிறைவடையும் என கூறப்பட்டது.ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாதியளவு கூட பணிகள் நடக்கவில்லை.

எனவே இரண்டாவது பைப்லைன் திட்டத்தை விரைவு படுத்தி கோவில்பட்டிக்கு குடிநீர் வழங்கவலியுறுத்தி நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். திரளான மக்கள் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்