வரலாற்றில் இன்று-திராவிட நாடு எனும் தனி நாடு கோரிக்கையை கை விடுவதாக தி. மு. க செயற்குழு…!
வரலாற்றில் இன்று – 1963, நவம்பர் 3 – திராவிட நாடு எனும் தனி நாடு கோரிக்கையை கை விடுவதாக தி. மு. க செயற்குழு தீர்மானம் இயற்றியது. தனி நாடு கோருவதை சட்ட விரோதம் ஆக்கி, “பிரிவினை தடை” சட்டத்தை மத்திய அரசு 1963_ல் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை வைத்து, தி.மு.கழகத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. இதன் காரணமாக, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாக, தி.மு.கழகத் தலைவர் அண்ணா அறிவித்தார்.
25_10_1963 அன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:_
“பிரிவினை தடை” சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதால், திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிட தி.மு.கழகம் முடிவு செய்து இருக்கிறது. தி.மு.கழகம், சட்ட வரம்புக்கு உட்பட்ட கட்சியாக இயங்க விரும்புவதால், இந்த முடிவுக்கு வந்து இருக்கிறது.