கொட்டும் மழையிலும் போராடும் மாதர் சங்கம் : ஏன் ? எதற்கு?
அரசு நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதநை கண்டித்து மாதர் சங்கம் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் குதித்துள்ளது.
ரேசன் கடைகளில் உள்ள சர்க்கரை விலையேற்றம், பெருட்கள் தட்டுபாடு, அளவை குறைதல், தடை செய்யப்பட்ட பருப்பை நிறுத்திவிட்டு தரமான உளுந்தம்பருப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்து பெரம்பூரில் இன்று மாதர் சங்கம் சார்பில் கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை அந்த பகுதியின் தலைவர் உஷா தலைமை தாங்கினார். அப்பகுதி செயலர் பிரமிளா, மாவட்ட செயலர் பாக்கியம், பொருளாளர் கோட்டீஸ்வரி, மாநில செயலர் ராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.