இந்தியாவை மிரட்டுவதற்காகவே அணுஆயுதம்… பாக்., பிரதமரின் முதல் பேட்டி
நியூயார்க் : இந்தியாவை மிரட்டுவதற்காகவே அணுஆயுதம் தயாரித்துள்ளோம். பாக்., தனது அணுஆயுதங்களை கடந்த 50 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்துள்ளது. இது குறித்து எந்த நாடும் கவலை கொள்ள தேவையில்லை என்று பாக். பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுக்குழுவின் 72வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள பாக்., பிரதமர் ஷாஹித் அப்பாஸி, தான் பிரதமரான பிறகு முதன் முறையாக சர்வதேச டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாக்., – அமெரிக்கா இடையே 70 ஆண்டு கால நட்பு உள்ளது. ஆப்கானால் தான் இந்த நட்பு ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிட பாக்., தயாராக உள்ளது.
பயங்கரவாதம் எங்கள் இருவருக்கும் பொதுவான எதிரி. இந்தியாவை விட பயங்கரவாதம் தான் பாக்.,க்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதே சமயம் இந்தியா எப்போதும் பாக்.,க்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
அணுஆயுதங்களை வைத்து பாகிஸ்தானை மிரட்டி வருகிறது. எங்களிடமும் அணுஆயுதங்கள் உள்ளன. இந்தியாவை மிட்டுவதற்காகவே அணுஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளோம். இந்திய ராணுவத்தினர் மறைமுக போர் உத்தியை கையாள்கின்றனர். அதை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணுஆயுதங்களை உருவாக்கி உள்ளோம்.
பாக்., தனது அணுஆயுதங்களை கடந்த 50 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்துள்ளது. இது குறித்து எந்த நாடும் கவலை கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி உள்ள நிலையில் இவர் இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.