சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீடு
சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகளை தீக்கதிர் மூத்த செய்தியாளர் ச.வீரமணி தமிழில் மொழியாக்கம் செய்த நூலை இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான சீத்தாரம்யெச்சூரி மக்களவையில் ஆற்றிய உரைகளை தில்லியில் உள்ள தீக்கதிர் நாளிதழின் மூத்த செய்தியாளர் ச.வீரமணி தமிழில் மொழியாக்கம் செய்து வந்தார். அந்த முழு தொகுப்பை நூலாக பாரதிபுத்தகாலயம் வெளியிட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள சமாஜம் (தாசப்பிரகாஷ் அருகில்) நடைபெறுகிறது. விழாவிற்கு சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்ட செயலாளர் அ.பாக்கியம் வரவேற்புரையாற்றினார். விழாவில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் எம்.பி தலைமையேற்று நூலை வெளியிட்டார். . விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் மா.சுதர்சனநாச்சியப்பன் ( காங்கிரஸ் ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில நூலை எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, தமிழ் இந்து ஆசிரியர் கே.அசோகன், காயிதே மில்லத் கலைக்கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேரா.ஜெ.ஹாஜாகனி, லயோலா கல்லூரி அதிபரி அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி சே.ச இயக்குநர் ராஜூமுருகன், வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா, பேராசியர் கல்பலான கருணாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்