இந்தியாவுக்கு நவீன விமானங்களை விற்க ரஷ்யா ஆர்வம்..,

Default Image

இந்திய விமானப்படையில் கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவை சேர்ந்த மிக் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த விமானங்களை உற்பத்தி செய்யும் மிக் நிறுவனம், இன்னும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக் – 35 ரக விமானங்களை உற்பத்தி செய்துள்ளது. தற்போது இந்த விமானத்தை இந்தியாவுக்கு விற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது.அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் இல்யா டரசென்கோ அளித்த பேட்டி: வானில் அமெரிக்க ஜெட் விமானங்களை தோற்கடிக்கும் திறன் பெற்றது. இந்த விமானங்களை இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் அறிமுகபடுத்த முயற்சி செய்து வருகிறோம். இந்த போர் விமானங்களை, இந்தியாவிற்கு விற்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டரை பெற இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த விமானங்களை பெற இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. விமானத்தில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் அதன் வசதிகள் குறித்தும், இந்தியாவின் தேவை குறித்தும் , அந்நாட்டின் தேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்