இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு இன்று அறிவிப்பு…!
நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இந்த பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.
இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளன. முதல் நாளில் மருத்துவத்திற்கான நோபல் பரிசும், நாளை இயற்பியலுக்கும், நாளை மறுநாள் வேதியியலுக்கும் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. அக்டோபர் 5ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்காகவும், அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.