அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக வட கிழக்கு மாகாணங்களான கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது.
பனிப்புயல் காரணமாக பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். சாலைகள் முழுவதும் பனி படர்ந்து இருப்பதால் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மின் இணைப்புகளும், எரிவாயு குழாய்களும், சேதம் அடைந்துள்ளன.
நியூயார்க் நகரம் பனிப்புயலால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அங்கு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் சில அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடப்பதால், பல நகரங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியா, நியூயார்க் மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகமான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பனிப்புயலால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகள், மும்முரமாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் பனிப்புயலை வழக்கம்போல் ஆடல், பாடலுடன் வரவேற்கத் தொடங்கிவிட்டனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…