ஜப்பானில் பனிப் புயலால் போக்குவரத்து பாதிப்பு – நிவாரணம் வழங்கிய நெடுஞ்சாலைத்துறையினர்!
ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கி நெடுஞ்சாலை துறை சரி செய்து வைத்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு பிரச்சினைகளால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தான் வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பலர் உயிரிழந்தனர். பலர் தங்களது வீடு வாசல்களை இழந்தனர். தற்பொழுதும் ஜப்பானில் பனி பொலிவு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. குளிர்காலமாக இருப்பதால் இனி அதிக அளவில் அங்கு தொடர்ச்சியாக பனி பொழிவு வழக்கம் போல ஏற்படும்.
இந்நிலையில் இன்றும் ஜப்பானில் ஏற்பட்ட பனி பொழிவு பாதிப்புகள் காரணமாக கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாகனங்களுடன் சாலையிலேயே தேங்கியதால் கடும் நெரிசல் உண்டாகியுள்ளது. இந்த பனியை அகற்ற நேரமாகியது. எனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனத்தில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் போர்வைகள் அந்நாட்டின் நெடுஞ்சாலை துறையினால் வழங்கப்பட்டதுடன், பணி அகற்றி அதன் பின் போக்குவரத்து நெரிசலும் சரி செய்யப்பட்டுள்ளது.