இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் மத்தியில் படம் பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பொன்னின் செல்வன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் வெளியாகும் செப்டம்பர் 30 -ஆம் தேதி கிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கும் வெளியாகிறது.
இதையும் படியுங்களேன்- திடீர் ட்விஸ்ட்… ஒரே படத்தில் இணையும் விஜய் – கமல்.! இயக்குனர் யார் தெரியுமா..?
இது தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் வேதா படத்தின் ரீமேக். தமிழில் இயக்கிய அதே இயக்குனர்களான புஷ்கர் &காயத்ரி தன ஹிந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார்கள் . படத்திற்கான மிரட்டலான டிரைலர் கூட இன்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஹிந்தியில் விக்ரம் வேதா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளதால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஹிந்தியில் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…