கறுப்பின இளைஞர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டன 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரால், ஜார்ஜ் ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்.
ஜார்ச், போலீஸ் அதிகாரியிடம், கெஞ்சி கேட்ட போதும், அந்த போலீஸ் அதிகாரி இரக்கம் காட்டவில்லை. இதனையடுத்து இவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீஸ் அதிகாரியின் இந்த செயலை கண்டித்து கடந்த 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாஷிங்க்டனில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கால்வாசிக்கும் மேற்பட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…