அர்ஜென்டினாவில் முதல் முறையாக கருப்பு பூஞ்சை தொற்று பெண் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது மிக அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது அர்ஜெண்டினாவில் முதன்முறையாக பெண்ணொருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாட்டில் முதன்முறையாக பார்மோசா மாகாணத்தில் வசிக்கக்கூடிய 47 வயதுடைய பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பதாகவும், இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே உயர் ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததாகவும், இந்தப் பெண் ஏற்கனவே கடந்த மே 11ஆம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்பதாக இந்த மாத தொடக்கத்தில் இவருக்கு மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பார்மோசாவில் முதன் முறையாக இந்த பெண்ணுக்கு தான் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாம் அல்லது இதேபோன்று வேறு யாரும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனரா எனவும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…