திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பு!
கருப்பு சட்டை அணிந்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.
2018-2019 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை துணை முதலவரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.