மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் பலமானது தற்போது 86 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் காங்கிரசின் பலம் ஆனது 41 ஆக குறைந்துள்ளது இது குறித்த செய்தியின் விவரம் இதோ:
மாநிலங்களவையில் நடப்பாண்டிற்கான காலியான 61 இடங்களுக்கு தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது. அதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் நாட்டை உலுக்கி எடுத்து வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த 19 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 8 மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை வென்றது. அதே போல காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை தலா 4 இடங்களை தங்கள் தரப்பில் பெற்றன.
ஒட்டுமொத்த 61 இடங்களில் பாரதிய ஜனதா 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலமானது 86 ஆக உயர்ந்திருக்கிறது. எதிர்தரப்பில் உள்ள காங்கிரசின் பலம் 41 ஆக குறைந்து உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் சதமடித்து 100யைத் தொட்டுள்ளது.
இதைத்தவிர பா.ஜனதாவுடன் நட்பில் இருந்த வரும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 9 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 6 உறுப்பினர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சதமடித்துள்ள ஆளும் கட்சியான பாஜக மசோதாக்களை மாநிலங்களவையில் எவ்வித சிக்கலும் இன்றி நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் வாய்மொழியாக எடுத்துரைக்கின்றனர்.
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…