பாஜக மாநிலங்களவை எம்.பி. உடல்நலக்குறைவால் காலமானார்..!
பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே (73) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே (73) அவர்கள், மாரடைப்பு காரணமாக தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காலமானார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான துபே, கல்யாண் சிங் அரசில் 1991 – 92 வரை நிதியமைச்சராக பணியாற்றினார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார்.