BJP:நான்காண்டுகளை நிறைவு செய்தது மோடி அரசு…!!

Default Image

பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அரசு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக் கொண்டு வந்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும் வகையில் வரி ஏய்ப்புச் சட்டம் திருத்தப்பட்டதாகவும், பினாமி சொத்து சட்டத்தின் மூலம் கருப்புப்பணம் உருவாவது தடுக்கப்பட்டதாகவும், தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட அமலாக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு போன்றவையும் சாதனையாக கூறப்பட்டுள்ளன.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறுவார்கள் என்றும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப்படுவதாகவும்,கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்