சந்தானம் அவர்களின் பிஸ்கோத் படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தானம் மூன்று கெட்டப்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் டிரைலரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பிஸ்கோத் படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் 1 கதாபாத்திரத்திலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர், இதில் 3 கெட்டப் வேற சொல்லவா வேணும். ரசிகர்கள் படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…