பிரியாணி பிரியர்களே, முட்டை பிரியாணி செய்வது எப்படி? அறியலாம் வாருங்கள்!
ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- அரிசி
- வெங்காயம்
- தக்காளி
- மிளகாய்
- முட்டை
- கிராம்பு
- பட்டை
- இலவங்கம்
- கொத்தமல்லி
- நெய்
- இஞ்சி பூண்டு விழுது
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
செய்முறை
முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.இவை வதங்கும் நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அவித்த முட்டையை லேசாக அங்கங்கு கேஜிரி அதனுடன் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
அதன் பின் தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து கிளறி வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். குக்கரில் வைத்தால் 3 விசில் வைக்கவும். அதன் பின் இறக்கினால் அட்டகாசமான முட்டை பிரியாணி தயார்.