டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம்!
டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள அபர்ன் எனும் நகரில் பிறந்தவர் தான் பிரெடரிக் ரஸல். இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் பணி புரிந்துள்ளார். அதன் பின்பாக ராணுவ வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி வழங்கக்கூடிய திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அதன் பின்பு இவர் மருத்துவ கல்லூரி பேராசிரியரும், டைபாய்டு நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமாகிய சர்.அல்ம்ரோத் ரைட்டின் என்பவருடன் இணைந்து ஆய்வு கூட பார்வையாளராக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
பின் இவர் டைபாய்டு கிருமிகளை அழிக்கக்கூடிய தடுப்பு மருந்தை மேம்படுத்தியுள்ளார். முதலில் ராணுவ வீரர்களுக்கு இந்த மருந்து 1910 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து நல்ல பலனைத் தந்துள்ளது. இதனை அடுத்து 1911 ஆம் ஆண்டு முதல் இதை அனைவரும் செலுத்த வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் பின்பு இவரது பணி பொது நலத் திட்டங்களில் சிறந்து விளங்கியதால் இவரது பங்களிப்பைப் பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி பப்ளிக் வெல்ஃபேர் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. பின்பு நான்கு ஆண்டுகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றிய டைபாய்டு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர், தனது 90-வது வயதில் 1960 ஆம் ஆண்டு மறைந்தார். பிரெடரிக் ரஸல் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.