அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடனும் உயிர் தப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே தனி அறைக்குள் சென்று சுட்டுக் கொன்றுள்ளார். இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரித்த பொழுது விருந்தில் கலந்துகொண்டு காயமடைந்த பெண் ஒருவரின் காதலன் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு கொள்வதற்காக தனி அறைக்குள் சென்றதாகவும் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவலர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்துவிட்டு உயிரிழந்த நபர் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டது? கொலையாளி ஏன் தன்னையும் சுட்டுக் கொண்டார், என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறை அதிகாரி வின்ஸ் நிஷ்கி என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…